• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பத்திரிகையாளர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம்- முதல்வர் வழங்கினார்

ByA.Tamilselvan

Oct 31, 2022

ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கினார். அனைத்து செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க, அரசு சார்பில் மாதந்தோறும் 10,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
2022 – 2023-ம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வுபெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் 10,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வுபெற்ற 7 பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை இன்று (31-ம் தேதி) சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.