• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

100 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தாகும் – அதிர்ச்சி தகவல்!

ByA.Tamilselvan

May 31, 2023

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் 100 மருத்துவகல்லூரிகள் ஆங்கீகாரம் ரத்தாகும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேசிய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதவிர தமிழ் நாடு, குஜராத், அசாம், பஞ்சாப், ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் செயல்பட்டு வரும் சுமார் 100-க்கும் அதிக மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து மருத்துவ துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறும் போது, ‘தேசிய மருத்துவ கவுன்சில் ஆதார் சார்ந்த பயோமெட்ரிக் முறையிலான வருகை பதிவேட்டை சார்ந்து இருக்கிறது. ஆனால் மருத்துவர்களின் பணி நேரம் நிர்ணயிக்கப்படாத சூழலே நிலவுகிறது. அவர்கள் இரவு நேரம் மற்றும் அவசர காலங்களிலும் பணியாற்ற வேண்டும். இதனால் தேசிய மருத்துவ கவுன்சில், பணி நேரத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி வருகிறது. மருத்துவ கல்லூரிகளின் நிர்வாகம் நடைமுறைக்கு உகந்ததாக இல்லை, இதனால் தேசிய மருத்துவ கவுன்சில் இதனை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது,’ என்று தெரிவித்தார்.