

கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு சூரங்குடி இலந்தையடி தட்டு கிராமத்தில் “எங்கள் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றம்” சார்பில் 8 அடி உயர சிலை நிறுவ அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நிதி திரட்டி இந்த சிலையை நிறுவ முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக நற்பணி மன்ற நிர்வாகிகள் சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய்வசந்த் அவர்களை சந்தித்து நிதி வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று விஜய்வசந்த் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைக்க தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 1 லட்சம் வழங்க ஒப்புக்கொண்டார். அதற்கான காசோலையை நற்பணி மன்ற நிர்வாகிகளிடம் வழங்கினார். ராஜாக்கமங்கலம் காங்கிரஸ் வட்டார கமிட்டி தலைவர் திரு. அசோக்ராஜ், நற்பணி மன்ற தலைவர் தங்கேஷ், செயலாளர் பிரதிஷ், பொருளாளர் பீரவீன், காங்கிரஸ் நிர்வாகி கோஷல்ராம் ஆகியோர் உடனிருந்தார்.
