
பீகாரில் நாளை நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் தலைநகர் பாட்னா சென்றடைகிறார். முதலமைச்சருடன் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி ஆர் பாலு ஆகியோர் சற்று முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து பாட்னா புறப்பட்டு சென்றனர்.
