

நடிகர் விஜய்யின் 49 வது பிறந்த நாளான இன்று, நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்க மோதிரத்தை வழங்கினர், இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவரும், பொறுப்பாளருமான K.N சிவா, மாவட்ட செயலாளர் எட்வின், மாவட்ட பொருளாளர் சலீம், மாவட்ட துணை செயலாளர் எஸ்.நாராயணன் மற்றும் மாநகர தலைமை மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர்…