• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வைர ஆபரணத்தில் கண்களை திறந்து மூடும் திருச்செந்தூர் முருகன்…

Byadmin

Jul 30, 2021

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோவில் சூரனை வதம் செய்த தளமாக விளங்குகிறது. வங்கக்கரையோரம் உள்ள இந்த கோவிலின் அழகே தனி தான். திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம், தேடித்தேடி வருவோர்ககெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் என்று டி.எம்.சௌந்திரராஜனும் சீர்காழி கோவிந்தராஜனும் திரைப்படத்தில் உறுதி பாடிய தளம். தேவார மூவரும் அருணகிரி நாதரும் இந்த செந்தில் முருகனின் அழகை வர்ணித்து பாடியுள்ளனர்.
வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் திருச்செந்துர்ரும் ஒன்று. நமது சங்க இலக்கியங்களில் சேயோன் என்று சொல்லப்படுகிற கடவுளாக திருச்செந்தூர் முருகன் விளங்குகிறார். இந்த ஊரில் வெண் சந்தனம் பிரசித்தி பெற்றது. இந்த முருகனுக்கு வெண் சந்தனக் காப்பும் பிரசித்தி பெற்றது. தங்கம் வெள்ளி உள்ளிட்ட நகைகளில் முருகனை தரிசித்த கண்கள் வைர ஆபரணங்களை கண்டால் சொர்க்கத்தையே பார்த்தது போலிருக்கும். அப்படி ஒரு வைர ஆபரணம் சாத்தப்பட்ட போது காட்டப்படும் தீபாரணையின் போது செந்தில் முருகனின் கண்கள் மூடி திறக்கிற அதிசயத்தை பார்க்க முடியும். உங்கள் கண் முன்னே செந்தில் நாதன் காட்சி தருவது போலவே இருக்கும். பாருங்கள்.