• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

விஜய் பட நாயகி பூஜாவுக்கு லாக்டவுனால் வந்த சோதனை!…

By

Aug 8, 2021

பூஜா ஹெக்டேவின் கைவசம் ஆச்சார்யா, ராதே ஷ்யாம், மோஸ்ட் எலிஜிபிள் இளங்கலை, பீஸ்ட் என பல படங்கள் உள்ளன. இந்தநிலையில் அவரை அடுத்தபடியாக மூன்று புதிய தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். என்றாலும், தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு லாக்டவுன் காரணமாக தாமதமாகி வருவதால் அவரால் புதிய படங்களுக்கு சரியானபடி தேதிகளை ஒதுக்க முடியவில்லை.

அதனால், தற்போது அவர் கைவசமுள்ள ஆச்சார்யா, ராதே ஷ்யாம், இளங்கலை ஆகிய படங்களை ஒவ்வொன்றாக முழுமையாக முடித்துக்கொடுக்கும் பணிகளில் இறங்கியிருக்கிறார். அந்தவகையில், ராதே ஷ்யாம் படத்தில் தனக்கான காட்சிகளை சமீபத்தில் முடித்துக்கொடுத்துள்ள பூஜாஹெக்டே, ஆச்சார்யா படத்தில் ஒரேயொரு பாடலை மட்டுமே பேலன்ஸ் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது 2019ல் தொடங்கப்பட்ட மோஸ்ட் எலிஜிபிள் இளங்கலை என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தில் அகில் அக்கினேனியுடன் நடித்து வரும் பூஜாஹெக்டே, இந்த படத்தை முழுமையாக நடிப்பதற்குள் ஆச்சார்யா பட பாடலையும் முடித்து விட திட்டமிட்டிருக்கிறார். அதன்பிறகே புதிதாக கமிட்டாகியுள்ள படங்களுக்கு அடுத்தடுத்து தேதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளார் பூஜா ஹெக்டே.