• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ராமேஸ்வரம் – பைஸாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Byadmin

Jul 30, 2021

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் – பைஸாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. வண்டி எண் 06793 ராமேஸ்வரம் – பைசாபாத் வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் 19 முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஞாயிற்றுகிழமைகளில் ராமேஸ்வரத்திலிருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 05.05 மணிக்கு பைஸாபாத் சென்று சேரும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 06794 பைஸாபாத் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் 22 முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதன்கிழமைகளில் பைஸாபாத்திலிருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் அதிகாலை 03.45 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். இந்த ரயில்கள் மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், சென்னை எழும்பூர், கூடூர், விஜயவாடா, வாரங்கல், பல்ஹார்ஷா, நாக்பூர், இட்டார்சி, ஜபல்பூர், சாட்னா, பிரயாக்ராஜ் (அலஹாபாத்), ஜான்பூர், ஷாகன்ச், அயோத்தியா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பைஸாபாத் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சந்திராபூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். இந்த ரயில்களில் 3 குளிர்சாதன மூன்று அடுக்கு படத்திற்கு பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 பார்சல் வேனுடன் இணைந்த மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.