• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலாவின் பேட்டியை தந்தி டிவியில் வருகின்றது என்றும், அதை தினத்தந்தி பத்திரிகை, தொடர்ந்து செய்திகளாக வருகின்றன….

Byadmin

Jul 20, 2021

கடந்த 1989 சட்டமன்ற தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகம் கலைஞர் தலைமையில் ஆட்சிக்கு வந்தது. நான் அப்பொழுது வேட்பாளராக கோவில்பட்டி தொகுதியில் திமுக போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய நேரம். அது என்னுடைய அரசியலில் வாழ்வில் பெரிய அடி. அது வேற விஷயம்.

கழக ஆட்சி அப்போது அமைந்து 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி அன்று பட்ஜெட் முதல் நிதி நிலை அறிக்கையை கலைஞர் அவர்கள் தாக்கல் செய்யும்பொழுது நான் சட்டமன்றத்தில் பார்வையாளர் மாடத்திலிருந்து கவனித்தேன். இத்தனைக்கும் மேலிருந்து கீழே சட்டமன்ற நிகழ்வுகளை சரியாக நன்றாக கவனிக்க முடியும். அன்று நடந்தது என்ன?

பட்ஜெட் தாக்கல் அன்று அ.தி.மு.க வினர் கூட்டம் கூட்டமாக கோட்டைக்கு வந்தனர். பல கார்கள் புடைசூழ, எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா கோட்டைக்கு 10.50. முன்னரே, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் வந்தார். சட்டசபையில் தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது மணி காலை 11 மணிக்கு சபை கூடியது. சபாநாயகர் தமிழ்குடிமகன், திருக்குறளை வாசித்தார். உடனே, சட்டசபை காங்கிரஸ் துணைத்தலைவர் குமரி அனந்தன் எழுந்து, ”ஜெயலலிதா கடிதம் விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் துரை, சபையின் உரிமையை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் கலைஞர் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருகிறோம்’ என்றார்.மூப்பனார்,எஸ்.அழகர் சாமி , (சிபிஐ) என் சங்கரய்யா (சிபிஎம்) அவையில் இருந்தனர்

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா எழுந்து, ”முதல்வர் மீதும் போலீஸ் கமிஷனர் மீதும் உரிமை மீறல் தீர்மானத்தை கொடுத்துள்ளேன். எனது டெலிபோன் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. முதல்வரும் அவரது அமைச்சரவையும் பதவி விலக வேண்டும். அதற்கான ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வருகிறேன்” என்று பேசினார். வழக்கத்துக்கு மாறாக, சஃபாரி உடையில் வந்திருந்த முன்னாள் பேரவை தலைவர் பி.எச்.பாண்டியன் பேசினார். அவர், ‘தி.மு.க-வுக்கு ஆதரவாக பேசினார்’ என்று அ.தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநயகர் தமிழ்குடிமகன், ‘ பி.எச். பாண்டியன் இருக்கையில் அமர வேண்டும்’ என்று உத்தரவு போட்டுவிட்டு, ‘இங்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமை மீறல் பிரச்னை குறித்து அலசி ஆராய்ந்து வரும் திங்கள்கிழமை பதில் கூறுகிறேன். இப்போது பட்ஜெட் உரையை முதல்வர் வாசிக்கலாம்’ என்று அறிவித்தார். கருணாநிதி பட்ஜெட் உரையை வாசிக்க எழுந்தார்.

அன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் பட்ஜெட் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்க எழுந்தார். உடனே, ஜெயலலிதா குறுக்கிட்டு எழுந்து ஓர் அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார். ”முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று அவர் சொன்னவுடன்,. அ.தி.மு.க உறுப்பினர்கள் சிலர் முன்னேறி சென்று கலைஞர் கையில் இருந்த பட்ஜெட் உரையை கிழித்தனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் கலைஞரின் மூக்குகண்ணாடி நழவியது.செருப்புகள் வீசப்பட்டன. எழுந்தவுடனே “யூ கிரிமினல்”, எப்படி நீங்கள் சமர்ப்பிக்க முடியும் என்று ஜெயலலிதா வம்பு இழுத்தபொழுது, தலைவர் ஏன் என்று ஒரு கேள்வி கேட்டார். உடனே தலைவருடைய முகக் கண்ணாடியை நோக்கி, கையால் அடிக்கவும் பாய்ந்ததெல்லாம் உண்டு. அப்பொழுது அதை பாதுகாக்க வேண்டும் என்று இன்றைக்கு மு.கண்ணப்பன் இருக்கும் அன்றைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் என்று நினைக்கின்றேன். உடனே பேராசிரியரை தாண்டி சாதிக் பாஷா நாஞ்சிலரைவை தாண்டி, அவர் முன்னிலையில் வந்தார். அதற்குப் பிறகு அடுத்துதான் துரைமுருகன் இருந்தார்.
அவரும் எழுந்து நின்றார். உடனே துரைமுருகன் ஜெயலலிதாவின் சேலையை இழுத்தார் என்று ஒரு கதையை கட்டினார்கள்.

துரைமுருகன், கலைஞர் தலைவர், பேராசிரியர், சாதிக் பாஷா, நாஞ்சில் மனோகரன் அதற்குப் பிறகு மு.கண்ணப்பன், இவர்களைத் தாண்டி அவர் இருந்தார். அதன்பிறகு கே.பி.கந்தசாமி அறநிலையத்துறை அமைச்சர் இருந்தார்.
அதற்குப் பின்தான் கோ.சி.மணி, பொன் முத்துராமலிங்கம், வீரபாண்டிய ஆறுமுகத்தைத் தாண்டி அந்த அமைச்சர்கள் வரிசையில் வடகோடியில் துரைமுருகன் இருந்தார்.
உடனே துரைமுருகன் தான் எதிரிலிருந்து அந்தப் புடவையை இழுத்தார் துச்சாதனனைப் போல செய்ததாக தப்பாக திட்டமிட்டு பிரச்சாரம் செய்தார்கள்.
அப்போது உடனே தலையை தன் கையால் கோதி முடியை கலைத்தார் புடவையை கசக்கி கொண்டார்.
ஜெயலலிதா. அன்றைக்கே கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, செங்கோட்டையன் போன்றவர்கள்எல்லாம்ஜெயலலிதாவைசுற்றி சட்டமன்றத்தில் நின்று ஜெயலலிதா ஆதரவாக திமுக ஆட்சிக்கு
எதிராகசத்தம் எழப்பினர்.இருந்து அன்றைக்கு செய்த பிரச்சாரம் எல்லாம் மறந்து விட முடியாது.

அ.தி.மு.க உறுப்பினர்கள், திருநாவுக்கரசர், செங்கோட்டையன், அண்ணாநம்பி முசிறி தங்கவேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்.,
உடன் இருக்க சபையில் இருந்து வெளியேறிய ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ”துரைமுருகன் எனது சேலையை பிடித்து இழுத்து கிழித்தார். அப்போது கீழே விழுந்ததில் எனது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. முதலமைச்சர் மிகவும் ஆபாசமாக ஒரு வார்த்தையைச் சொல்லித் திட்டினார். தி.மு.க-வினர் என்னுடைய தலையைக் குறிபார்த்து தாக்குதல் தொடுத்தனர். சட்டசபைக் காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருந்தார்கள். இந்த அரசு நீக்கப்படவேண்டும்” என்று உண்மைக்கு புறம்பாக பேட்டி கொடுத்தார்.

தலைவர் கலைஞருக்கு கண்ணில் சிறிய காயம் ஏற்பட்டு உடனே மருத்துவர் வந்து பேரவை தலைவர் தமிழ்குடிமகன் அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.அமைச்சர்வீரபாண்டிஆறுமுகத்தை அரசு பொது மருத்துவ
மனைக்கு கொண்டு செல்லபட்டார். அன்றைக்கு நடந்தது. எல்லாருக்கும் தெரியும்.

அன்றைக்கு பத்திரிகையாளராக இருந்த பலபேரும் அன்றைக்கு இதையெல்லாம் கவனித்ததும் உண்டு.

ஆளுநர் மாளுகைக்கு விரைந்தார் ஜெயலலிதா… தனது ஆதரவாளர்கள் திருநாவுக்கரசர், செங்கோட்டையன், அண்ணாநம்பி முசிறி தங்கவேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன். மற்றும் சிலருடன் ஆளுநர் மாளிகைக்கு விரைந்த ஜெயலலிதா போயஸ் கார்டனுக்கு திரும்பிய பிறகு.. செய்தியாளர்களிடம் ஜெ. ஒரு பெண்ணுக்கு சட்ட சபையிலேயே பாதுகாப்பு இல்லை என இட்டு கட்டி கூறினார்.

அன்றைக்கு இவர்கள் எல்லாம் என்ன பேசினார்கள். அண்ணன் துரைமுருகன் அந்தப் பக்கத்திலேயே இல்லை. வடகோடியில் இருந்தார், 6, 7 அமைச்சர்கள் தாண்டி இருந்தார். எப்படி கலைஞரும் நேரில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் இருக்கையில், எப்படி குறுக்கில் பெரிய மேஜை இருக்கும்பொழுது மேஜையில் ஆவணங்கள் இருக்கும் பொழுது, பத்து நபர்களை தாண்டி அவர் வந்து புடவையை இழுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் அன்றைக்கு தவறான மாதிரி பேசப்பட்டது.
ஜெயலலிதாவுடன் உடனிருந்தவர்கள் திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், செங்கோட்டையன் போன்றவர்களெல்லாம் இருந்தார்கள். சொல்லவேண்டியதை சொல்லி தானே ஆக வேண்டும். வரலாறு அல்லவா. மறைக்க முடியாது அல்லவா.
கிட்டத்தட்ட எமர்ஜென்சி காலத்திற்கு பிறகு ஆட்சி போய் மறுபடியும்1989 களில் ஆட்சிக்கு வந்து, அந்த ஐந்து ஆண்டுகளில் கூட ஆள முடியாமல் பிரதமர் சந்திரசேகர் காலத்தில் திமுக ஆட்சியைகலைத்தாரே அதற்கு யார் காரணம்.
நிதிநிலை அறிக்கையில் நியாயமாக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. அதை தேவையில்லாமல் சர்ச்சை பண்ணியது யார்? அதை எல்லாம் திருப்பி பார்க்க வேண்டும். இன்றைக்கு எது வேண்டுமென்றாலும் பேசலாம். மக்களுக்கு தெரியாது. 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மக்களுக்கு மறதி அதிகம் என்று நினைத்துக் கொண்டு பலரும் பேசுகிறார்கள், தியாகவான்கள் மாதிரி. என்ன தியாகம் செய்துவிட்டார்கள். அவர்கள் பிழைத்தார்கள். அவர்கள் ஒரு ஊடக வெளிச்சத்திற்கு வந்தார்கள். அவர்கள் அந்தப் பதவியை வைத்துக் கொண்டு தங்களுக்கான சுய நலத்தை பார்த்துக் கொண்டார்கள். அவ்வளவுதானே. நாட்டுக்கு என்ன பலன்.
வழக்குகள், தண்டனை பெற்றவர்களை எப்படி கொண்டாட முடியும். இதுதான் எதார்த்த நிலை. இது அன்றைக்கு நடந்த பொழுது நான் கண் முன்னாடி பார்த்தேன். அன்றைக்கு மாடத்தில் இருந்து கவனிக்கும்போது மேலிருந்து பார்த்தால் தெளிவாக தெரியும்.
கண்ணப்பன் தான் குறுக்கில் வந்து பேராசிரியர், சாதிக் பாஷா, நாஞ்சிலரை தாண்டி கண்ணப்பன்தான் கலைஞரை பாதுகாக்க அதை தடுக்க வந்தார். துரைமுருகன் அதற்குப் பிறகு தான் வந்தார். அவர் சேலையைத் தொடவில்லை. அந்த பட்ஜெட் ஆவணங்கள் வீசப்பட்டன. பெரிய கட்டாக இருக்கும் ஆவணங்கள். இது எல்லாம் நடந்தது உண்மை. இதை எப்படி வேண்டுமானாலும் திருப்பி பேசலாம், மாற்றி பேசலாம், பொய்யாகப் பேசலாம். பட்ஜெட் உரை கிழிக்கப்பட்ட பிறகு இரு கட்சி உறுபினர்கள் மத்தியில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன் ஜெவின் தோளில் குத்தி தள்ளியதாகவும். பிறகு துரைமுருகன் அவர்கள் ஜெவின் சேலையை பிடித்து உருவ முயன்றதாகவும். அவரிடம் இருந்து போராடி சேலையை மீட்டுக் கொண்டு ஜெ தப்பித்தார். ஜெவை குறிவைத்து அவமானப்படுத்த திமுகவினர் திருநாவுக்கரசு, அவரை அரண் போல காத்து சட்டமன்றத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். இந்த சண்டையின் போது ஜெ தலையில் பலமா

ஆனால் நடந்தது இதுதான். எதார்த்தமாக பாருங்கள். நடுநிலையோடு பாருங்கள்.
இதுவும் பழைய செய்திதான். 32 ஆண்டுகளுக்கு மேல் கழிந்துவிட்டன. இன்றைக்கு பேசுகிறேன் என்றால், இதை சொல்ல வருவது ஏனென்றால் நேரடியாக பார்த்தவன் என்ற முறையில். சிலர் இது எதற்கு என்பார்கள். உண்மை இருக்க வேண்டும் அல்லவா. வரலாற்றில் உண்மையான சம்பவங்கள் நெறிப்படுத்த வேண்டும் அல்லவா அதற்குத்தான் இந்தச் செய்தி.
****
இந்த சம்பவங்கள் நடந்து இப்போது, 32ஆண்டுகள் ஆகிவிட்டன. 2003 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி அ.தி.மு.க ஆட்சியில் பட்ஜெட் விவாதத்தின் போது மீண்டும் அந்த பிரச்னை காரசார விவாதமானது. அப்போது பேசிய ஜெயலலிதா, ”இதே சட்டசபையில் எம்.ஜி.ஆர் தாக்கப்பட்டார். அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. 1989 ஆம் ஆண்டு சட்டசபையில் துரைமுருகன் என் சேலையை பிடித்து இழுத்தார். என் சேலை கிழிந்துவிட்டது. அப்போது நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். ஆளும்கட்சியினர் அப்போது என்னிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லை” என்றார்.
துரைமுருகன்: ”நீங்கள் கூறுவது தவறு. நான் உங்களைத் தாக்கவே இல்லை. நீங்கள் கூறும் இடத்தில் இருந்து நான் அதிக தூரத்தில் இருந்தேன்”.

(அன்றைக்கு,இன்றைய முதல்வர் ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து போட்டியிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினராக முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்றைய அவையின் கொறடாவாக கடைய நல்லூர் தொகுதி எம்எல்ஏவாக கா.மு.கதிரவன் இருந்தார். பேரவைத் தலைவர் முனைவர் தமிழ் குடிமகன் இருந்தார்.)இதே நிலைதான் எம்ஜிஆர் மறைவுக்கு பின்,சட்டமன்றத்தில் ஜா, ஜெ என பிரச்சனைநடந்த போது பெரும்
குழப்பம் ஏற்பட்டது. அன்று பேரவை தலைவர் பி. எச் .பாண்டியன் . ஜெ அணியினர் சட்ட மன்ற இருக்கைகளை உடைத்து மைக்களை பிடிங்கி கையில் எடுத்துக் கொண்டு ஓடிய காட்சிகள் என நேரில்கண்ட இந்த சம்பவத்தையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.