• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க போகும் அதிரடி அறிவிப்புகள்!..

Byadmin

Aug 6, 2021

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்து 100 நாள்களை நெருங்கப் போகிறது. முதன்முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் ஆகஸ்ட் 15ஆம் தேதி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார். சரியாக அதேநாளில் தான் திமுக ஆட்சியமைத்து 100ஆவது நாள் வரப்போகிறது.


எனவே அதற்குள் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவற்றை நிறைவேற்றவில்லை என அதிமுக மாநிலம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடத்தியது.
மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம், பால் விலை குறைப்பு, கொரோனா நிவரணத் தொகை வழங்குதல் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் தீர்வு காணப்படுகிறது. 100 நாள்களில் இந்த மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என தேர்தலுக்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அந்த திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கொரோனா மாத்திரையை வழங்கிய காவல் கண்காணிப்பாளர் ! இருப்பினும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, நிதி நிலைமை காரணமாக பல திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை.


இந்த சூழலில் ஸ்டாலின் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்னதாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அதில் கூட்டறவு கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, முதியோர் உதவித் தொகை அதிகரிப்பு, பெண்களுக்கு உரிமைத் தொகை, புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் என பல அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு அறிவிப்பு: எந்தெந்த ஊர்களில் என்னென்ன கட்டுப்பாடுகள்? வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் அந்த துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.