• Tue. Apr 23rd, 2024

பிரதம மந்திரி குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண அவசர நிலை நிதியின் கீழ் ரூ.3 கோடி திட்டத்தில் நிமிடத்திற்கு 1000_ம் லிட்டர் ஆக்ஸிஜன் தயாரிக்கும் உற்பத்தி மையம்.

Byadmin

Jul 14, 2021

பிரதம மந்திரி குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண அவசர நிலை நிதியின் கீழ் ரூ.3 கோடி திட்டத்தில் நிமிடத்திற்கு 1000_ம் லிட்டர் ஆக்ஸிஜன் தயாரிக்கும் உற்பத்தி மையத்தை.

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்.தமிழக அரசின் தொழில் மற்றும் தொழிலில் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்கள்.குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்,குமரி ஆட்சியர் அரவிந்த்.

கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர் கொள்ளும் விதமாக தேவையான ஆக்ஸிஜனை, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலே உற்பத்தி செய்யும் வகையில் பிரதம மந்திரி குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண அவசர தேவைக்கு,ரூ.3 கோடி திட்டத்தில் நிமிடத்திற்கு 1000_ம் லிட்டர் ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஆற்றல் கொண்டது இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்
இந்த நிகழ்வில் மருத்துவ கல்லூரி முதல்வர் திருவாசகம் , மருத்துவ மனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் அருள் பிரகாஷ், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் வேல்ராஜ், நாகர்கோவில் நகர தி.மு.க.செயலாளர் மகேஷ்,குமரி கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *