• Sun. Apr 19th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

பள்ளிகள் திறப்பு.. முதல்வர் புதிய அதிரடி அறிவிப்பு!…

By

Aug 15, 2021

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதேபோல் கொரோனா நெருக்கடி காலத்தை மனதில் கொண்டு அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க இயலாத சூழல் நிலவுதால் பாடத்திட்டங்களை 50 சதவீதம் வரை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் பள்ளிகளை திறக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவிலும் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கொரோனா 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளி வளாகத்திற்குள் நுழைய ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளார்.