• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நெல்லை மாவட்டத்தில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியே காவலர் உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது……

Byadmin

Jul 27, 2021

கொரனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நெல்லை மாவட்டத்தில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியே காவலர் உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றும் வண்ணம் நாளொன்றுக்கு 500 பேர் வீதம் அழைப்பு ஆணை அனுப்பப்பட்டு தேர்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவல்துறை. சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 3437 ஆண்களுக்கும் 2622 பெண்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு அவர்களுக்கு இன்று முதல் நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொள்ளும் நபர்களுக்காக நெல்லை மாவட்ட மற்றும் மாநகர காவல் துறை சார்பில் ஆயுதபடை மைதானத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 500 நபர்களுக்கு மட்டுமே உடற்தகுதி தேர்வு நடைபெற செய்யப்பட்டுள்ளது. அதற்கான அழைப்பு கடிதம் ஏற்கனவே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தெரிந்துகொள்ள இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே 2 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது. நெல்லை மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஆண்களுக்கும் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்தில் பெண்களுக்கும் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இன்று முதல் தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறவிருக்கும் உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் மைதானத்திற்குள் வரும்போது செல்போன்,ஸ்மார்ட் வாட்ச்,எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.ஒரே கலரிலான உடை அல்லது லோகோ பதித்த உடை அணியகூடாது என பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் தகுதி தேர்விற்கு வரும் நபர்கள் அனைவரும் கொரனா பரிசோதனை செய்த முடிவு சான்றிதழ்களை கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரனா காலம் என்பதால் ஒரு முக கவசம் கையில் வைத்திருப்பதோடு முககவசம் கட்டாயம் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தபட்டுள்ளது.இது தவிர மைதானத்திற்கு வரும் அனைவரும் கிருமி நாசினி கொண்டு கைகளை குறிப்பிட்ட கால இடைவேளியில் சுத்தம் செய்வதோடு மைதானத்தையும் கிருமி நாசி கொண்டு சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடற்தகுதி தேர்வுக்கு என கொரனா விதிமுறைகளை பின்பற்றி பல்வேறு ஏற்பாடுகளுடன் ஆயுத படை மைதானம் செய்யப்பட்டுள்ளது. அழைப்பானை அனுப்பப் பட்ட நபர்களுக்கு முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் அதனைத் தொடர்ந்து உடல் அளவீடுகள் எடுக்கும் பணியும் 1200 மீட்டர் ஓட்டமும் நடைபெறுகிறது காவலர் உடற்தகுதி தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு நடைபெறும் மையங்களை சுற்றி 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.