• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நெல்லை ஓய்தியர் சங்கம் நடத்திய விழாவில் மயானப் பணியாளர்கள் பாராட்டப் பெற்றனர்…

Byadmin

Jul 30, 2021

கொரோனா தொற்று 2 வது அலையின்போது எண்ணற்றோர் உயிரிழந்தனர். உற்ற உறவுகளே இறுதிசடங்குகளை செய்ய இயலாத நிலையில் மயானப்பணியாளர்கள் கொரோனா தடுப்பு உடைகள் முழுமையாக இல்லாத நிலையிலும் இறந்தவர்கள் உடலை உரிய மரியாதையுடன் எரியூட்டினார்கள்/அடக்கம் செய்தார்கள். ஒரே நாளில் பல உடல்கள் தகனம் செய்யப்பட்டன/அடக்கம் செய்யப்பட்டன. இந்த சீரிய பணியினுக்கு ஒர் அங்கிகாரம் அளிக்கின்ற வகையில் அவர்களை பாராட்டுவது என திரு.கோ.சீத்தாராமன் (சென்னை) தலைமையிலான தமிழ் நாடு ஓய்வூதியர் சங்கம், திருநெல்வேலி மாவட்ட மையம் முடிவு செய்தது.
இதற்கான விழா 28-7-2021 அன்று மாலை 5 மணியளவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் நடைபெற்றது. மயானப்பணியாளர்கள் 31 பேருக்கு தலா ரூ1000/ மதிப்பிலான பொருட்கள் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.விஷ்னு IAS அவர்களால் வழங்கப்பட்டது. ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள, கவனிக்கப்படாத இந்த பிரிவினருக்கு முக்கியத்துவம் அளித்து இந்த விழாவினை நடத்திய ஓய்வூதியர் சங்கத்திற்கு மாவட்ட ஆட்சி தலைவர் நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெறிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத்தலைவர், திரு.இரா.சீத்தாராமன், மாநில துணைத்தலைவர் திரு. சாமி.நல்லபெருமாள், செயலாளர் திரு.பி.சங்கரநாராயணன், பொருளாளர் திரு.பாஷ்யம், நிர்வாகிகள் திருவாளர்கள் மாரிக்கண்ணு, சேவியர் ராஜா, அந்தோனிசாமி,சீதரன், குருசாமி, தேவிகா, பொன்னம்மாள், சங்கரபாண்டியன், சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.பழநி, மாவட்ட கருவூல அவலர் திரு.ஜவகர் ஜிந்தா, PA(G), தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய நெல்லை மாவட்டதலைவர் திரு.ராதாகிருஷ்ணன், செயலாளர் திரு.மாரியப்பன், பொருளாளர் திரு.நக்கீரன், தென்காசி மாவட்டதலைவர் திரு.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மயானப் பணியாளர்களை பாராட்டுவது என்பது மாநில அளவில் இது முதல் நிகழ்வு என அனைவராலும் பாராட்டப்பெற்றது. ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் திரு.சாமி.நல்லபெருமாள் மாவட்ட ஆட்சி தலைவரை தொடர்பு கொண்டு பங்கேற்க வைத்திருந்து    சிறப்பிற்குறியதாகும்.