• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

திருக்கோவில்களில் பணியாற்றி ஓய்வு பெற்று வறுமையில் வாடும் பூசாரி பெருமக்களுக்கு அரசின் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பூசாரிகள் பேரமைப்பு கோரிக்கை மனு…

Byadmin

Jul 19, 2021

திருக்கோவில்களில் பணியாற்றி ஓய்வு பெற்று வறுமையில் வாடும் பூசாரி பெருமக்களுக்கு அரசின் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பூசாரிகள் பேரமைப்பு கோரிக்கை மனு.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மனுநீதி முகாமில் மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே புளியங்குளம் பகுதியிலிருந்து பூசாரிகள் பெயர் அமைப்பு சார்பாக கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் தமிழகத்தில் குரானா பெருந்தொற்றிஒழிக்க இரவு பகல் பாராமல் ஓய்வின்றி போராடிவரும் தங்களுக்கு மனதிடம் உடல் ஆரோக்கியம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

கிராம மற்றும் நகர் தொகுதியில் பூஜை செய்து வரும் அரசியல் ஒரு கால பூஜை திட்டத்தில் பயனடைய பல்லாயிரக்கணக்கான பூசாரிகளுக்கு தற்போது உள்ள அரசாணப்படி நிவாரண நிதி உதவி வழங்க வேண்டும்.

திருக்கோவில்களில் பணியாற்றி ஓய்வுபெற்று வறுமையில் வாடும் பூசாரி பெருமக்களுக்கு அரசின் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.

ஓய்வூதியம் பெறும் பூசாரி இறக்க நேரிட்டால் அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.