• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தபால் வேன் மோதி ஒருவர் பலி….

Byadmin

Jul 27, 2021

சிவகங்கை அருகே தபால் வேன் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மூன்று பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து தபால் துறைக்கு சொந்தமான வேன் தபால்களை சேகரித்து கொண்டு சிவகங்கை நோக்கி வந்து கொண்டிருந்தது. ,
கொல்லங்குடி அருகே வந்த வேன் வளைவில் வேகமாக திரும்பிய போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முத்துபட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பையா (60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த முத்தையா என்பவர் படுகாயத்துடனும்,
வேனில் வந்த இருவர் காயமடைந்த நிலையிலும், சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து காளையார்கோயில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.