• Mon. Dec 1st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சவுதிக்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி காரைக்குடி டிஎஸ்பி இடம் 3 குழந்தைகளுடன் பெண் புகார்..

Byadmin

Jul 19, 2021

சவுதிக்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி காரைக்குடி டிஎஸ்பி இடம் 3 குழந்தைகளுடன் பெண் புகார்.

சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி பர்மா காலனி தந்தை பெரியார் நகர் எட்டாவது வீதியில் வாசிப்பவர் மலர்விழிஇவரது கணவர் நந்தகோபால் குடும்ப சூழ்நிலையின் காரணமாக சுமார் மூன்றரை வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் டிரைவர் வேலைக்கு சென்றார் சுமார் 19 மாத காலமாக அவரது கணவரிடம் இருந்து எந்தவிதமான போன்களும் வரவில்லை என்றும் மூன்று பெண் குழந்தைகளை கருத்தில் கொண்டு எனது கணவரை மீட்டு தரவேண்டும் என்று சிவகங்கைமாவட்ட ஆட்சித் தலைவர் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் மனு அளித்து உள்ளதாகவும் இன்று காரைக்குடி DSP வினேஜியிடம்தனது மூன்று பெண் குழந்தைகளுடன் வந்து புகார் அளித்துள்ளார்..