• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – 5பேர் கைது…

Byadmin

Jul 30, 2021

பாலக்கரை பகுதியில் 20லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – 5பேர் கைது.

அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கஞ்சா புழக்கமானது திருச்சி மாநகரில் அதிகரித்துவருகிறது. இதனிடையே கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், பாலக்கரை பென்சினர் காலணி மற்றும் எடத்தெரு ஆகிய இடங்களில் குடோன்களில் விற்பனைக்காக தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலினையடுத்து போலீசார் திடீர் சோதனை நடத்தியதில் 55மூட்டைகளில் ஆயிரத்து 800கிலோ எடையுள்ள 20லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பூமிநாதன், இளங்கோ, வடிவேல், ஹரிஹரன், பழனிக்குமார் ஆகிய 5பேரை போலீசார் கைதுசெய்தனர், மேலும் குட்கா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட டாடா இலகுரகவாகனத்தையும், இருசக்கரவாகனம் மற்றும் 4செல்போன்களையும் தனிப்படை போலீசார் பறிமுதல்செய்தனர்.