


கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த அடியெடுத்து வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் கன்னியாகுமரி தொகுதியின் முன்னாள் எம்பியுமான மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மகனான விஜய் வசந்த் எம்பி கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை விட ஒருலட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டெல்லியில் பதவி பிரமாணம் செய்து கொண்ட விஜய் வசந்த் தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
இந்தநிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ரெட்டியர்பட்டியில் ஆலங்குளம் வட்டார ராஜிவ் காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கேதன் சார்பில் விஜய் வசந்த் எம்பி பாராளுமன்றத்தில் பதவியேற்றதை கொண்டாடும் வகையில் செல்வராஜ் தலைமையில் எஸ்எம் மகாராஜா ஏற்பாட்டில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்சியை வெளிப்படுத்தினர். சிறப்பு விருந்தினர்களாக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஞானபிரகாஷ், தென்காசி மாவட்ட செயலாளர் ரூபன் தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் செயலாளர் தாயார்தோப்பு எம்எஸ் ராமர், அரிச்சந்திரன், இன்கோ சுப்பிரமணியன் உள்பட காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

