

வாடிப்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் அட்டை தொழிற்சாலைக்கு தடை கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டி கிராமத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இக்கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் செம்மினிபட்டி கிராமத்தில் சந்தான கோபாலன் என்பவர் மாசு ஏற்படும் அளவிற்கு அட்டை தொழிற்சாலைகளை உருவாக்க கட்டிடப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்
இந்த அட்டை தொழிற்சாலை எங்கள் கிராமத்தில் வந்தால் விவசாயம் பாதிக்கும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் எனவே தடை மாவட்ட நிர்வாகம் தொழிற்சாலையை கிராமத்திற்குள் அனுமதிக்கக்கூடாது இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று செம்மினிபட்டி ஊராட்சி சார்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்தனர்.
