• Wed. Mar 19th, 2025

ரேஷன் பொருட்கள் கொள்முதலில் இனி… தமிழக அரசு அதிரடி!…

By

Aug 13, 2021

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம் என நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியின்படி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்பட்டுள்ளதையும், அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிவதற்கான தரவுகளை திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள் முதல் முறை அமல்படுத்தப்படும் என்றும், அனைத்து துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அனைத்து அரசு நிதியும் கருவூலத்தில் வைக்கப்படும் வரிமுறையை சீர்செய்வதற்காக சட்ட, பொருளாதார வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்படும் என்றும், உணவு மானியத்துக்கு ரூ.8,437.57 கோடி நிதி ஒதுக்கீடு புதிய ரேசன் கடைகள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதே சமயத்தில் தற்போதுள்ள 1985ஆம் ஆண்டு தீயணைப்புச் சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.