• Fri. Apr 18th, 2025

‘ரெண்டில் ஒண்ணு பார்த்திடனும்’.. டெல்லி விரைந்த விவசாயிகள்!..

By

Aug 12, 2021

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு எதிரானது என தமிழக விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றனர். இந்த வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என்றும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், இந்த சட்டங்களுக்கு எதிராக 8 மாதங்களுக்கு மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள் வீதியில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் மற்றும் நாடு முழுவதும் விவசாயிகளின் ஆதரவுடன் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டு சட்டத்தை ரத்து செய்யாமல் மத்திய அரசு மௌனமாக இருந்து வருகின்றது. 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி சென்று போராட செல்கின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மற்றும் புதுக்கோட்டை யில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரயில் மூலம் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர். மத்திய அரசு தங்களது போராட்டத்தை திரும்பப் பெறும்வரை தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.