கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் முயற்சியை கைவிடக் கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் காவல்துறை தடையை மீறி நடைபெற்று வருகிறது இந்த போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா, உள்ளிட்டோர் கலந்து கண்டன உரை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில தலைவர் அண்ணாமலை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் கர்நாடக எம்பி மேகதாது அணை திட்ட அறிக்கை ஒப்புதல் குறித்த கேட்ட கேள்விக்கு மத்திய நீர்வள அமைச்சர் கூறும்போது இந்த திட்ட அறிக்கைக்கு கடைமடை நிலை மாநிலங்கள் தமிழ்நாடு ஒப்புதல் இல்லாமல், காவிரி நீர் மேலாண்மை ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு ஒப்புதல் கொடுக்க இயலாது என்று தெரிவித்துள்ளார், இதன் மூலம் மேகதாது அணை பிரச்சனை முற்றுக்கு வர உள்ளது நல்லதே நடக்கும் என்று தெரிவித்தார்