மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விராலூர் ஊராட்சியில் கொரோனா நலத்திட்ட உதவிகளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கதிர்வேல் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட விராலூர் ஊராட்சியில் சுமார் 320க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் பாதிக்கப்பட்ட விராலூர் ஊராட்சிப் பொதுமக்களுக்கு மூன்றாம் கட்ட நலத்திட்ட உதவிகளை 75வது சுதந்திரதினத்தன்று பத்திரிகையாளரும் & ஆன்மீகவாதியுமான முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கதிர்வேல் வழங்கினார்.
மக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கதிர்வேலின் முயற்சிக்கு அமெரிக்க வாழ் தமிழரான ஜோ.பிரபாகர் மற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் நண்பர்கள் , ஆயுத எழுத்து எழுச்சி அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் சிவசுரேஷ் , டென்னிஸ் பயிற்சியாளர் எட்வின் சுந்தர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன், சித்தாலபாக்கம் மாதவன் உள்ளிட்டோர் உதவி புரிந்தனர். அதன் மூலம் பொதுமக்களுக்கு 3ம் கட்ட கொரோனா நலத்திட்ட உதவிகளாக தரமான அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 320 குடும்பங்களுக்கு சாரசரியாக 5கிலோ அரிசி மற்றும் 8 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. தங்களுக்கு உதவிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் உள்ளிட்டோருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.