

மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் ‘இந்தியாவில் 2021ம் ஆண்டில் முதியவர்கள்’ என்ற தலைப்பிலான ஆவணத்தை நேற்று வெளியிட்டது. அதில் தெரிவித்து உள்ளதாவதுநாட்டில் தற்போது கேரள மாநிலத்தில்தான் முதியவர்கள் அதிக அளவில் உள்ளனர். அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் முதியவர்களின் பங்கு 16.5 சதவீதமாக உள்ளது. அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு முதியவர்களின் அளவு 13.6 சதவீதமாக இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் இமாச்சல் – 13.1 சதவீதம், பஞ்சாப் – 12.6, ஆந்திரா 12.4 சதவீதத்துடன் இதேபோல், நாட்டிலேயே முதியவர்கள் மிகக் குறைவாக இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் பிஹார் முதலிடத்தில் உள்ளது. அங்குள்ள மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை 7.7 சதவீதமாக இருக்கிறது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உத்தரபிரதேசம் – 8.1, அசாம் – 8.2 ஆக இருக்கின்றன.வரும் 2031ல் அதிக பட்சமாக கேரளாவில் 20.9 சதவீத முதியவர்கள் இருப்பார்கள். தமிழகத்தில் 18.2, இமாச்சலில் 17.1, ஆந்திராவில் 16.4, பஞ்சாபில் 16.2 என்ற வீதத்தில் முதியவர்களின் எண்ணிக்கை இருக்கும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதுமுதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, அந்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, போதிய மருத்துவ வசதிகள் இருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது’ என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

