
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ரெங்கநாதன் என்பவர் 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் அர்ச்சகராக பணி புரிந்து வருகிறார்.
தமிழக அரசு நேற்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன் அடிப்படையில் இன்று புதிய அர்ச்சகராக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சீனிவாசன் என்பவரை நியமனம் செய்துள்ளது.
இதனை தொடர்ந்து சீனிவாசன் இன்று காலை பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியில் சேருவதற்கு கோவில் அலுவலகம் வந்த போது, முன்னாள் அர்ச்சகர் ரெங்கநாதன் குடும்பத்தினர் புதிதாக பணி செய்ய வந்த சீனிவாசனை பணியில் சேர எதிர்ப்பு தெரிவித்து
போராட்டம் நடத்தினார். அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

சம்பவத்தை தெரிந்து சாத்தூர் நகர் காவல் துறையினர் போராட்டம் நடத்திய ரெங்கநாதன் குடும்பத்தினரை அங்கிருந்து வெளியேற்றி பின்னர் கோவில் நிர்வாக அலுவலர் தணலட்சுமி, சீனிவாசனை பணியில் சேர்த்து பூஜை செய்ய அனுமதித்தார்.
