


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் அஸ்வின் தாய் தந்தையை இழந்த இவர் பாட்டியின் பராமரிப்பில் படித்து வருகிறார் திருச்செங்கோடு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் முதலாமாண்டு பயின்று வருகிறார் சிறு வயதில் மரத்தில் ஏறி கீழே விழுந்ததில் வலதுகை பாதிக்கப்பட்டு துண்டிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது அதனை தொடர்ந்து ஒரு கையை வைத்து கிரிக்கெட் ஆட தொடங்கியுள்ளார்.
நாளடைவில் நன்றாக கிரிக்கெட் ஆடியுள்ளார் அவரது கல்லூரியில் கிடைத்த வாய்ப்பில் தமிழ்நாடு பாரா கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ளார் ஏ டீம் பி டீம் சி டீம் என்ற வரிசையில் சி டீமுக்கு தேர்வாகியுள்ள இவர் பயிற்சி செய்வதற்கு முறையான உபகரணங்கள் இல்லை என்று திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கவனத்திற்கு அப்பகுதியினர் கொண்டு சென்றனர்
இதனைத் தொடர்ந்து மாணவன் அஸ்வினுக்கு 10 ஆயிரம் மதிப்புள்ள கிரிக்கெட் உபகரணங்களை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் வழங்கினார்

இதுகுறித்து அஸ்வின் கூறும்போது நான் கொல்லப்பட்டி குடியிருப்பில் வசித்து வருகிறேன் இந்த ஆண்டு செங்குந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன் நான் பாரா கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன் எனக்கு விளையாடுவதற்கு முறையான உபகரணங்கள் இல்லை என்று சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு நண்பர்கள் கொண்டு சென்றார்கள் அதனைத் தொடர்ந்து 10 ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்களை எனக்கு அவர் வழங்கியுள்ளார்கள் அவருக்கு நன்றி இந்த உபகரணங்களை வைத்து சிறந்த முறையில் விளையாடி பெயர் எடுப்பேன் என்று கூறினார்

