• Thu. Feb 13th, 2025

மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அதிர வைத்த முதல்வர் ஸ்டாலின்!…

By

Aug 16, 2021

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை கடந்த 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அதிமுக ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், நலத்திட்ட உதவிகளுக்கு மட்டுமே கடன் வாங்கிக் கொண்டிருந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், வாங்கிய கடனுக்கு வட்டியைச் செலுத்தவுமே கடன் வாங்கும் அவலநிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதிமுக அரசு மீது குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் சட்டப்பேரவையில் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். முதலமைச்சர் பேரவையில் பேசியதாவது: நான் அதிகம் விளக்கம் சொல்ல விரும்பவில்லை. ஒரே வரியிலே சொல்ல வேண்டுமென்றால், வெள்ளை அறிக்கை என்பது ஏதோ தேர்தல் நேரத்தில், தி.மு.க. வழங்கியிருக்கக்கூடிய உறுதிமொழிகள் எல்லாம் நிறைவேற்ற முடியாத நிலையிலே, பின்வாங்குவதற்கான முயற்சி என்ற பொருள்பட அவர் ஒரு கருத்தை எடுத்துப் பேசினார். நேற்றைக்கு முன்தினம் 100-வது நாள் காணக்கூடிய இந்த ஆட்சிக்குப் பாராட்டுத் தெரிவித்து பலர் இந்த அவையிலே பேசியபோது, நான் ஏற்புரை ஆற்றிப் பேசுகிறபோதுகூட சொன்னேன். எந்தக் காரணத்தைக் கொண்டும், நாங்கள் அளித்திருக்கக்கூடிய வாக்குறுதிகளிலிருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார்.