• Wed. Apr 24th, 2024

மாஃபா பாண்டியராஜன் உளறுனான்னா நான் பதில் சொல்லனுமா?… செய்தியாளர்களிடம் சீறிய பிடிஆர்!…

By

Aug 12, 2021

பொருளாதாரம் பற்றி தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளறி வரும் முன்னாள் அமைச்சர் மாஃப பாண்டியராஜனுக்கு பதில் சொல்ல முடியாது என நிதி அமைச்சர் பி.டி.ஆ.பழனிவேல் தியாகராஜன் ஒருமையில் விமர்சித்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பத்திரிக்கையாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பின்வாங்கும் நோக்கம் இல்லை. முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பொருளாதாரம் தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளறி வருகிறார். அவரது உளரல்களுக்கு பதில் சொல்ல முடியாது என ஒருமையில் பேசினார்.

கடன் வாங்கி சொத்துக்களை பெருக்கினோம் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுவதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் பொருளாதாரம் வளர்ந்த மாநிலம் தமிழகம் என்பது உண்மை. அதற்கும் இந்த ஆளுக்கும் (மாஃபா பாண்டியராஜனுக்கும்) சம்பந்தமே இல்லை எனக்கூறினார். தொடர்ந்து பேசியவர் மாஃபா பாண்டியராஜன் உளறுவான் அதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியுமா? என மீண்டும் ஒருமையில் பேசினார்.

அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து இன்னும் பல திட்டங்கள் குறித்து எனக்கே தெரியவில்லை. 3 சதவீத மூலதனத்திற்கு மட்டுமே வாங்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கொள்கையை மறந்து 6 சதவீதம் மூலதனதிற்கு கடன் பெற்றுள்ளனர். அதிமுக ஆட்சியில் திட்டங்கள் துவக்க கடன் பெற்று பல திட்டங்களை துவங்கப்படாமல் ஊழல் நடைபெற்றுள்ளது அது விரைவில் கண்டறியப்படும். ஜெயலலிதா ஆட்சியில் இந்த அளவிற்கு கடன் சுமை இல்லை.பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு நிதி கட்சி துவங்கி அதற்கு பல்வேறு நபர்கள் பாடுப்பட்டுள்ளனர்.


அரசின் நோக்கம் வெளிப்படை தன்மை தான். அதன் அடிப்படையில் மட்டுமே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. வருவாய் பற்றாக்குறை உள்ளதை முன்னாள் முதல்வர் பழனிசாமி ஒப்புக்கொண்டு விட்டார்.மக்களுக்கு எந்த வளர்ச்சியும் அதிமுக ஆட்சியில் நடைபெறவில்லை. ஜெயலலிதா அறிவித்த தொலை நோக்கு பார்வை திட்டம் 2023 – நோக்கம் நிறைவேறவில்லை என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *