• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ஐந்து பைசாவுக்கு பிரியாணி – சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்…

Byadmin

Jul 23, 2021

மதுரை செல்லூர் பகுதியில் அக்ஷயா என்பவர் அசைவ உணவகம் திறந்துள்ளார். உணவகத்திற்கு விளம்பரம் தேடும் நோக்கோடு முதல் நாள் பிரியாணி வாங்க வரும் முதல் 100 நபர்களுக்கு செல்லாத 5 பைசா இருந்தால் பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டினார்.

இதனைத் தொடர்ந்து காலை முதல் நீண்ட வரிசையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழைய ஐந்து பைசா உடன் காத்திருந்தனர்.

இந்நிலையில்  விளம்பர படுத்தும் நோக்கோடு 5 பைசாவுக்கு பிரியாணி விற்பனை செய்வதாக கூறி உரிய கொரோனா விதிமுறைகளை  பின்பற்றாமல் பொதுமக்களுக்கு பிரியாணி விற்பனை செய்ததற்காக கடைக்கு மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்இ இதுமட்டுமல்லாமல் உரிய விளக்கம் அளிக்க கோரி உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.