• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மங்களூரிலிருந்து-திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் பரசுராம் ஏர்னாடு எக்ஸ்பிரஸ் ரயில்களை நெல்லை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்!…

By

Aug 7, 2021

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5வது வார்டு கிளை மாநாடு இன்று சனிக்கிழமை நடைபெற்றது ,மாநாட்டிற்கு ஆ.குமார் தலைமை தாங்கினார், கிளை செயலாளர் சங்கர வேலாயுதம் வேலை அறிக்கையை சமர்ப்பித்து பேசினார் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். சுடலை ராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார், கிளை மாநாட்டில் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை மாநகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும், சிந்துபூந்துறையில் உள்ள பழுதடைந்த ரேஷன் கடையை புதிதாக கட்டித்தர வேண்டும், சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் எதிரே உள்ள மாநகராட்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், மங்களூரிலிருந்து திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் பரசுராம் மற்றும் ஏர்நாடு ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிளை மாநாட்டில் 5வது வார்டு சிபிஎம் நிர்வாகிகள் சண்முகம், செல்வம், வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

5வது வார்டு சிபிஎம் செயலாளராக சங்கர வேலாயுதம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்