• Mon. Jul 14th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

மகிபாலன்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு…

Byadmin

Jul 20, 2021

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே “பூங்குன்றன் நாடு” என்று அழைக்கப்படும் மகிபாலன்பட்டியில் உள்ள அருள்மிகு பூங்குன்ற நாயகி அம்மன் திருக்கோவில் கோவில் உள்ளது. இச்சுற்றுப் பகுதிகளில் உள்ள 24 அரை கிராமங்களுக்கு சொந்தமாக திகழ்ந்து வரும் இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இக்கோவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடியிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அறிவித்திருந்த தளர்வுகளால் கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கோவிலல் பூஜை நடத்தி வந்த பொன்னழகு நேற்று மாலை 8 மணியளவில் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். வழக்கம்போல் இன்று அதிகாலையில் கோவிலை திறந்து பார்க்கும் போது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் சிதறிக் கிடந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக கோவில் அறங்காவலர் கண்டவராயன்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த சார்பு ஆய்வாளர் சேதுராஜ் உண்டியல் உடைப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்திலுள்ள கைரேகை நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணையின் போது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்படும் உண்டியல் கடந்த 2 மாதங்களாக திறக்கப் படவில்லை என்றும், 24 அரை கிராம மக்களும் வந்து வழிபடும் இக்கோவிலில் நேர்த்திக்கடனாக திருமணம் நடைபெற வேண்டி தங்கத்தில் தாலி, வெள்ளியில் கண், கும்பம் போன்ற நகைகளையும் இக்கோவிலில் செலுத்துவார்கள். அதனால் கண்டிப்பாக உண்டியலில் நகைகள் பணம் அதிகமாக இருக்கும் எனவே இது திருடு போய் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என கிராம மக்கள் கூறிவருகின்றனர்.