• Tue. Apr 16th, 2024

பெட்ரோல் விலை குறைப்பு… பதவியேற்ற 99 நாட்களிலேயே திமுக அதிரடி!…

By

Aug 13, 2021

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்கவில்லை என்று மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதிமுக தலைமையிலான இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலைக் குறைப்பு செய்யப்படவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும் என்றும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்று திமுக பிரச்சாரம் செய்து வந்தது. திமுக ஆட்சி அமைத்து போது முதல் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 கோப்புகளில், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியது.

சமீபத்தில் தமிழகத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு சில மாவட்டங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் மேலும், பல மாவட்டங்களில் 100 ரூபாய்க்கும் விற்பனையானது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.49 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டபடி பெட்ரோல் மீதான வரியில் 3 ரூபாயைக் குறைக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற 99 நாட்களிலேயே திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியை செயல்படுத்தியுள்ளது தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *