• Mon. Jan 20th, 2025

பெகாசஸ் விசாரணைக்கு அஞ்சும் மோடி அரசு கரூர் எம்.பி. ஜோதிமணி விளாசல்….

Byadmin

Jul 30, 2021

பெகாசஸ் என்ற அன்னிய நிறுவனத்தின் மென்பொருள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்கிறோம். இஸ்ரேல் உளவு மென்பொருளை தயாரிக்கும் என்.எஸ்.ஓ. ஒரு நாட்டிலிருந்த ஒரு நாட்டுக்குத்தான் விற்பார்கள். அப்படி எனில் இந்திய பிரதமரும், உள்துறை அமைச்சரும் தான் இதனை வாங்கியிருக்க வேண்டும். இதனை விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஏன் அதனைக் கண்டு ஒன்றிய அரசு பயப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்தந்த நாடுகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளன. இங்கிலாந்து அரசாங்கம் அந்த விசாரணை துவங்கியுள்ளது. இந்திய அரசு மட்டும் தான் இதனை விவாதிக்க மறுக்கிறது. இது மக்களின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை. இதில் எதிர்கட்சியினர், ஊடகவியலாளர்கள், என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 4 சமூக செயல்பாட்டார்கள் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த மென்பொருளை இஸ்ரேல் நிறவனம் இலவசமாக கொடுக்காது. ஆயிரக்கணக்கான கோடி செலவழித்தால் தான் பெற முடியும். மக்களின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்காக ஏன். வீணடிக்கப்பட்டுள்ளன என்பதே எங்களது கேள்வி.

வாதம் வேண்டும் என்று எதிர்கட்சிகள் சொல்லவில்லை. ஆளுங்கட்சி தான் சொல்கிறது இந்த போராட்டத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒற்றுமையுடன் செயலாற்றி வருகிறார்கள். என்றார் ஜோதிமணி. இந்த பிரச்சனையில் ஜோதிமணி உள்ளிட்ட எம்.பி.க்கள் மீது நாடாளுமன்ற அவையில் எடுக்க பரிசீலப்பதாக தெரிகிறது.