கொரோனா கொடுக்கும் நெருக்கடிகள் போதாது என்று அடுத்தடுத்து திரையுலகில் முன்னணி பிரபலங்கள் வேறு மரணமடையும் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அதிலும் குறிப்பாக விவேக், பாண்டு, துளசி தாஸ், நெல்லை சிவா என காமெடி நடிகர்கள் அடுத்தடுத்து மாண்டு போனது மக்களுக்கு அச்சத்தை கொடுத்தது.
தமிழில் வடிவேலு உடைய பல்வேறு படங்களில் காமெடியான நடித்த காளிதாஸ் மரணமடைந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டப்பிங் கலைஞராக 3000 மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். சன் தொலைக்காட்சியில் 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிரபலமான தொடர்களின் ஒன்றான ‘மர்மதேசம்’ தொடரில் இவர் கொடுக்கும் டைட்டில் கார்டு குரலே 90ஸ் கிட்ஸ்களுக்கு பிரபலம் தான். சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்த இவர், பின்னர் பல்வேறு வடிவேலுவின் காமெடியில் அசத்தி இருப்பார்.
கடந்த சில வருடங்களாக இவருக்கு ரத்தத்தில் பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போக உடனடியாக அவருக்கு ரத்தத்தை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறவே, அதுவும் மாற்றப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலமாகி இருக்கிறார். இவரது திடீர் மரணத்தால் அவரது குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.