


அரசு பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பாலிடெக்னிக் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், டிப்ளமோ நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கு, மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கோவை, அவிநாசி ரோட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், அமைப்பியல், இயந்திரவியல் உள்ளிட்ட ஆறு துறைகள் உள்ளன. பிளஸ் 2 முடித்தவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள், நேரடியாக இரண்டாமாண்டில் சேரலாம். மதிப்பெண் அடிப்படையில், தர வரிசை பட்டியல் வெளியிட்டு, இன சுழற்சி படி, கலந்தாய்வு மூலம், சேர்க்கை உறுதி செய்யப்படும்.சேர விரும்புவோர், www.tngptc.in/www.tngptc.com ஆகிய இணைய தளங்களில், பதிவு கட்டணமாக, 150 ரூபாய் செலுத்தி, ஆக., 5க்குள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்களுக்கு, பதிவு கட்டணம் இல்லை. நேரடியாக விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. கூடுதல் தகவலுக்கு, 0422 – 2573 218 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

