திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அதிவேகமாக வந்த கார் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்குபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கருப்பையா, இவர் தனது பைக்கில் மெடிக்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது நால்ரோடு பகுத்தில் அதிவேகமாக வந்த வாடகை கார் கருப்பையா அவரது பைக்கின் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கருப்பையா ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியிலேயே கருப்பையாவின் உயிர் பிரிந்தது. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் நிற்காமல் தப்பிச் சென்ற நிலையில், ஓட்டுனர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.