

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை. தியாகத்திருநாள் என்று சொல்லப்படுகிற இந்த நாளில் இப்ராகிம் நபியின் தியாகத்தை போற்றுகிற விழாவாகும். இறை தூதர்களின் இப்ராகிம் நபி முக்கியமானவர். இன்றைக்கு உள்ள ஈராக் நாட்டில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழ்ந்த அவருக்கு நெடு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. இறைவனிடம் வேண்டிக்கொண்டதன் அடிப்படையில் அவரது இரண்டாவது மனைவியான ஆசாராவிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தைக்கு இஸ்மாயில் என்று பெயர் வைத்தார் இப்ராகிம். இஸ்மாயில் பால்ய பருவம் அடைந்த போது இறைவன் இப்ராகிம் கனிவல் தோன்றி இஸ்மாயிலை தனக்கு பலியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இறைவனின் வேண்டுகோளை ஏற்று தனது பாசமிகு மகன் இஸ்மாயிலை பலியிட இப்ராகிம் தயாhரானா போது அவரது பக்தியை மெச்சி சிப்ராயீல் என்ற வானவரை அனுப்பி இறைவன் தடுத்தார். இஸ்மாயிலுக்கு பதிலாக ஒரு ஆட்டை பலியிட இறைவன் கேட்டுக்கொண்டதையடுத்து ஆடு பலியிடப்பட்டது. இந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாகத்தான் உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வேண்டுதலையொட்டி இறைவனுக்காக ஆடுகளை பலியிடுவது அதாவது குர்பானி தருவது இந்த பண்டிகையின் நோக்கமாகும். இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற அனைத்து கிராமங்களில் நடைபெற்ற சந்தைகளிலும் ஆடுகளின் விலை ஏற்றமடைந்ததால் ஆடுகள் விற்பனையில் தேக்கம் அடைந்தது.
அய்யலூர் ஆட்டுச்சந்தையில் விற்பனை ஆகவில்லை. 3 ஆயிரம் ஆடுகள் வந்தது. வியாபாரிகள் அதிகமாக வரவில்லை. ஒன்றரைக் கோடி ந~;டமடைந்தது. 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் வரை விலை உயர்ந்தது. இதனால் ஆடு வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டினர். ஒரு கிலோ ஆட்டுக்கறியின் விலை ரூ.700 வரை விற்கப்படுகிறது. ஆனால் ஆட்டுச்சந்தையில் ஒரு ஆட்டுக்கு கிலோ ரூ.1000 விலை நிர்ணயிப்பது போல விலை ஏற்றமடைந்ததால் வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டினர். இதே போல் பல சந்தைகளின் நிலையும் அது தான். வேண்டுதலுக்காக வேறு வழியின்றி ஆடுகளை வாங்கிச்சென்றவர்கள் உண்டு. எப்போதுமில்லாமல் ஆடுகள் இந்த முறை விற்பனையாகமல் பெரும் தேக்கமடைந்ததால் ஆடு வளர்ப்போர் வேதனையடைந்தனர். இதே போல் அதிகாரிபட்டி ஆட்டுச்சந்தையிலும் ஆடுகளின் விலை ஏற்றம் காணப்பட்டது. நோன்பு காலத்தில் விலை ஏற்றத்தால் விற்பனையில் மந்தமடைந்தது ஆடு வளர்ப்போரை கடுமையாக பாதித்தது.
