தமிழகத்தை பிரிக்கும் எண்ணம் பாஜகவுக்கு கிடையாது
உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும்
நெல்லையில் எம் ஆர் காந்தி எம்எல்ஏ தகவல்
நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள கே எஸ் மஹாலில் வைத்து நடைபெற்றது. மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். பிஜேபி மாவட்ட பொதுச் செயலாளர் கணேசமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் முத்துகுமார், மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி பிரிவு தலைவர்கள், தொழில் பிரிவு தலைவர்கள், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செயற்குழு கூட்டத்திற்கு பின்பு எம்ஆர் காந்தி எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில்….
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது உள்ளாட்சியில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறும்.
தமிழகத்தில் 1 கோடியே 80 லட்சம் தடுப்பூசி மத்திய அரசாங்கம் தமிழக அரசுக்கு தந்துள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழகத்தை ஓரம் கட்டுகிறது என திமுக அரசு கூறி மாயத்தோற்றத்தை உருவாக்கி கொண்டு வருகிறது.
தமிழகத்தை பிரிக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை திமுகவிற்கு வேண்டுமானால் அந்த எண்ணம் இருக்கலாம் என்றார்.