• Fri. Apr 18th, 2025

நான்காம் தூணின் பாதுகாப்பு கேள்விக்குறியான அவலநிலை..? வன்மையாக கண்டிக்கிறது தமிழ்நாடு அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்!..

Byadmin

Aug 7, 2021

ரவுடித்தனம் செய்தால் தமிழக அரசும் காவல்துறையும் தன்னை ஒன்றும் செய்யாது என நினைத்து கடந்த 3ம் தேதி மாலை கோயம்புத்தூரை சேர்ந்த மருத்துவரின் மகன் ராஜேஷ்குமார் என்பவன் கையில் நீளமான வாலுடனும், ஒரு கையில் கேடயத்துடனும் “சத்தியம் தொலைக்காட்சி” அலுவலக வரவேற்பு அறையில் நுழைந்து காட்டு மிராண்டித்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு, தான் தாக்கியதை நாளை சத்தியம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என தெளிவாக காவல்த்துறை முன்பே சத்தியம் தொலைக்காட்சிக்கு மிரட்டலுடன் சவால் விட்டு போலீஸ் ஜீப்பில் ஏறிய பிறகு தன்னை பைத்தியக்காரன் என்று சொல்லிக் கொள்கிறான். இதே காவல்துறையும் சொல்லுகிறது அவன் பைத்தியகாரன் என்று!
சத்தியம் தொலைக்காட்சி ஊழியர்களை மிரட்டும் காட்சிகளை காவல்துறை அருகில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இதே ஒருவன் காவல்துறை அலுவலகத்தில் நுழைந்து இப்படி ஒரு செயலை செய்து இருந்தால் அவனை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்துமா? காவல்துறை.
கோயம்புத்தூரை சேர்ந்த இவன் குஜராத்திலிருந்து சென்னை ராயபுரத்தில் உள்ள சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் நுழைந்து ரவுடித்தனம் செய்யும் அவனை காப்பாற்ற காவல்துறை நினைக்க காரணம் என்ன? தமிழ்நாட்டிலுள்ள ஊடகத்திற்கு மட்டுமே இது ஒரு சவாலாக தான் எடுத்துக்கொள்ள முடியும். இது தனிப்பட்ட சத்தியம் தொலைக்காட்சியில் நடந்த சவால் என எடுத்துக்கொள்ள முடியாது. இவன் மிரட்டியது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் சவால் விடுத்துள்ளான். இதற்கு பின்னால் இருந்து கொண்டு இவனை இயக்கியது யார்? முறையான விசாரணை மேற்கொண்டு தமிழக அரசு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் இவனை குண்டர் சட்டத்தில் கைது செய்து பத்திரிக்கை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமென அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தமிழ்நாடு, தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

மேலும் ரவுடித்தனம் செய்த இவன் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படாததைக் கண்டித்து, வருகின்ற 11.8.2021 புதன்கிழமையன்று, தமிழகம் தழுவிய பத்திரிக்கையாளர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.