• Fri. Apr 18th, 2025

நாத்திகர்களின் அடிக்கல் நாட்டு விழாவும் ஆத்திகர்களின் பூமி பூஜையும்!…

Byadmin

Aug 7, 2021

கடவுள் மறுப்பை பிரதானமாகக் கொண்டு துவங்கப்பட்ட தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையுடன் அறிஞர் திராவிட முன்னேற்றக்கழகத்தை உருவாக்கினார். அண்ணா ஆட்சியிலும் சரி கலைஞர் எம்.ஜி.ஆர். ஆட்சிகளிலும் அரசு விழாக்களில் திட்டம் துவங்கும் நிகழ்ச்சி அடிக்கல் நாட்டு விழாக்களாக நடத்தப்பட்டன. பெரியார் அண்ணாவின் நாத்திக சிந்தனையின் அடிப்படையில் பூஜை புணஸ்காரங்களுக்கு அனுமதி இல்லை.

எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஆத்திக சிந்தனையுடன் அரசு விழாக்களில் அடிக்கல் நாட்டு விழாக்களுக்கு பதிலாக பூமி பூஜையாக மாற்றப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த போது கலைஞர் ஆட்சியிலும் பூமி பூஜை தொடர்ந்தது. அது முதல் இப்போது வரை அரசு விழாக்களில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பதிலாக பூமி பூஜையாக நடத்தப்பட்டு வருகிறது.

இது ஆத்திக சிந்தனைக்கு வெற்றியைக் கொடுத்தாலும் திமுக ஆட்சியில் இந்த ஆத்திகத்தோடு ஒரு சமரசம் செய்து கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. இதில் ஒரு முறிப்பை ஏற்படுத்தும் சிந்தனை ஸ்டாலின் அரசுக்கு இருக்குமா? என்பதே நமது கேள்வி. திண்டுக்கல் அருகே உள்ள உலகம்பட்டியில் 7.7 கோடி செலவில் மாயாண்டிகுளத்திற்கு தண்ணீர் செல்ல அணை கட்டப்படுகிறது. இந்த அணைகட்டு திட்ட துவக்க நிகழ்ச்சியில் பூமி பூஜையை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். பழனி தொகுதி எம்.எம்.ஏ. செந்தில்குமார் மற்றும் ஆட்சியர் விசாகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.