• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நயினார் குளத்தில் படகு போக்குவரத்து வருமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு…

Byadmin

Jul 30, 2021

நெல்லை மாவட்டம் டவுணில் உள்ள நயினார் குளம் தற்போது நீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.நெல்லை மாநகர பொதுமக்கள் திருவிழாக்கள் மற்றும் பிற விழாக்களின் போது தங்கள் குடும்பத்தினருடன் வெளியே செல்ல பொழுதுபோக்கு இடங்கள் ஏதும் இல்லை.ஆண்டு தோறும் நீர் நிரம்பும் நயினார் குளற்றினை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு படகு சவாரியினை துவங்கினால் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியாக அமையும் அரசுக்கும் போதிய வருமானம் வரும் ஆகவே நயினார் குளத்தை தூர்வாரி படகு சவாரியினை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.