

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூர் அதிமுக சார்பில் பேரூர் செயலாளர் கே.பி. சுப்பிரமணியன் வீட்டின் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் அதிமுக செயலாளர் கே.பி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
எம்ஜிஆர் மன்ற நகர செயலாளர் சாலமோன் ராஜா, அம்மாபேரவை செயலாளர் தனபால், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் தங்கசாமி, மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் பெரியபாண்டியன். வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சாந்தகுமார், பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிக்சன்,சிறுபான்மை பிரிவு மாவட்ட பொருளாளர் ஐசக் சேகர், மாவட்ட எம்ஜிஆர் அணி தமிழரசன், மாவட்ட துணை செயலாளர் பசுவதி மாவட்ட மகளி;ர் அணி இணை செயலாளர் அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலங்குளம் சிறப்பு நிலைபேரூராட்சி அதிமுக வார்டு செயலாளர்கள் ஜெயசிங், செல்லமணி, முத்தையா, கே.பி. ராமலிங்கம், செல்வம், அம்மியடியான், தேவதாஸ், ஐசக்சேகர், சாலமோன்ராஜா, தங்கராஜ், சுபாஸ் சந்திரபோஷ், முத்துராஜ், செந்தில், சத்தியராஜ், ஜவஹர்லால் நேரு, ஒன்றிய மகளி;ர் அணி செயலாளர் முத்துலெட்சுமி. ஒன்றிய மகளிர்அணி தலைவர் ரதிகிளி, நகர பொருhளாளர் முருகேசன். மாரியப்பன், டெய்லர் துரைபாண்டியன். பாலசுப்பிரமணியன். 5 வது வார்டு சுப்பிரமணியன். 15 வது வார்டு முன்னாள் செயலாளர் துரைப்பாண்டி, 13 வது வார்டு கவுன்சிலர் சொரிமுத்து, நகர மகளிர் அணி மீனா, பவுல் ராஜ் உள்பட பேரூர் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்; தேர்தல் நேரத்தில் அறிவித்த பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைப்பதாகவும். வுpலைவாசி உயர்வு கட்டுப்படுத்துவது, பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களில் நடிவடிக்கை, பெண்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய திமுக அரசை கண்டித்து பாதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர்.
