• Wed. Sep 18th, 2024

தேனி மாவட்டத்தில் 21588 பேர் குரூப் 2 தேர்வு எழுதுகின்றனர்

Byvignesh.P

May 21, 2022

தேனி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு இன்று காலை தொடங்கியது – 21,588 பேர், 82 மையங்களில் எழுதுகின்றனர்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏதேர்வு இன்று தொடங்கியது.தேனி மாவட்டத்தை பொறுத்தவரை பெரியகுளம் தாலுகாவில் 3799 நபர்கள் உத்தமபாளையம் தாலுகாவில் 6179 நபர்கள்தேனி தாலுகாவில் 16 ஆயிரத்து 610 நபர்கள் என மொத்தம் 21 ஆயிரத்து 588 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர் இந்த தேர்வானது தேனி தாலுகாவில் 43 மையங்கள் பெரியகுளம் தாலுகா வில் 14 மையங்கள் உத்தமபாளையம் தாலுகாவில் 25 மையங்கள் என்று மொத்தம் 82 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன இந்த தேர்வை கண்காணிக்க தேனி தாலுகாவில் 976 பறக்கும் படை பெரியகுளம் தாலுகாவில் நான்கு இயக்க குழுக்கள் 3 பறக்கும் படை உத்தமபாளையம் தாலுகாவில் 6 இயக்க குழுக்கள் 4 பறக்கும்படை என மொத்தம் 19 இயக்க குழுக்களும் 13 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன 82 தேர்வு மையங்களில் 82 வீடியோ கிராபர்கள் தேர்வை பதிவு செய்துவருகின்றனர் இந்த தேர்வு பணியில் தேனி தாலுகாவில் எண்பத்தி ஆறு நபர்களும் பெரியகுளம் தாலுகாவில் இருபத்தி எட்டு நபர்களும் உத்தமபாளையம் தாலுகா வில் 50 நபர்களும் என மொத்தம் 164 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் மாவட்ட காவல்துறை சார்பில் அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையத்துக்குச் செல்ல சிறப்பு பேருந்து இயக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *