


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 59வது பிறந்தநாளை அவருடைய கட்சியினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
சிவங்கை மாவட்டம் இளையான்குடியில் இளையான்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கொடி கம்பம் நட முயன்ற போது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெருஞ்சோகத்தை உருவாக்கியுள்ளது. கீழையூர் காலனியில் நேற்று இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கட்சி கொடி கம்பம் நடும் முயற்சியில் குழந்தை, ஞானமுத்து, அவையன்,ஆறுமுகம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின் ஒயரில் எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் உரசியது. அப்போது கொடிக்கம்பத்தை பிடித்திருந்த நால்வரும் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டனர்.

இதில் குழந்தை மற்றும் ஞானமுத்து ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த இளையான்குடி காவல் நிலையத்தினர் சம்பவம் இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆறுமுகம், அவையனை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

