• Sat. Apr 20th, 2024

திருபுவனம் புஷ்பவனேஸ்வரர் கோவிலில் ஆளில்லாத ஆடி அமாவாசை!…

By

Aug 8, 2021

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க மதுரை , சிவகங்கை விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து . ஆடி அமாவாசை, தினமன்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி வைகை ஆற்றில் நீராடி புஷ்பவனேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். ஆனால் ‌தொடர்ந்து இரண்டு வருடமாக கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் நிகழ்வு நடைபெறவில்லை.

திதி, தர்ப்பணம் செய்யும் புரோகிதர்கள் யாரும் வைகை ஆற்றிற்கு வரவில்லை
இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.
இருப்பினும் ஒருசில பக்தர்கள் வைகை ஆற்றில் குளித்து விட்டு கோவில் வாசலில் விளக்கு ஏற்றி புஷ்பவனேஸ்வரரை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

போலீசார் வைகை ஆற்றிற்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்கள் கூட்டம் இல்லாததால் திருப்புவனம் வைகையாறு வெறிச்சோடி காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *