திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் முகநூல் நண்பர்கள் குழு சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக 500 பேருக்கு முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை களக்காடு அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு முகநூல் நண்பர்கள் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் தலைமை தாங்கினார். களக்காடு காவல் ஆய்வாளர் ஜோசப் ஜட்சன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக நாங்குநேரி காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீ லிசா ஸ்டெபிலா தெரஸ் கலந்துகொண்டு முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் அவர் கொரோனா நோயிலிருந்து தப்பிக்க எப்போதும் முகக் கவசங்கள் அணிந்து வரவேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முகநூல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த களக்காடு நெல்சன், கூட்டுறவு சங்க தலைவர் ராஜசேகர், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சமூக ஆர்வலர் மாவடி பிராங்ளின், வழக்கறிஞர் பிரின்ஸ்,ஆனந்த், சமூக ஆர்வலர்கள் பாதுஷா, முகமது காசிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.