• Wed. Dec 11th, 2024

திருச்சியில் 11 வது உலக தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் – திருச்சியை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் கோரிக்கை…

Byadmin

Aug 1, 2021

தமிழ் மொழிக்கு பல்வேறு வகையில் பங்காற்றிய திருச்சியில் 11 வது உலக தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் – திருச்சியை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் கோரிக்கை

த.மு.எ.க.ச,திருச்சி மாநகர மேம்பாட்டு குழு, திருக்குறள் கல்வி மையம்,வானம் அமைப்பு,எஸ்.ஐ.ஒ அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் திருச்சி பிரஸ் கிளப்பில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அந்த அமைப்புகளின் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய த.மு.எ.க.ச மாநில துணை தலைவர் நந்தலாலா, தமிழ்நாட்டின் தொன்மையான நகரங்களில் ஒன்றாக திருச்சி மாவட்டம் இருக்கிறது.தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு திருச்சி பல்வேறு வகையில் பங்காற்றி உள்ளது. இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் மொழிக்காக கீழபழுர் சின்னசாமி உயிர் தியாகம் செய்தது திருச்சியில் தான்,அகில இந்திய வானொலியில் தமிழ் பண்பலை தொடங்க வேண்டும் என திருச்சி வானொலி நிலையம் முன்பு தான் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது, தமிழை ஆட்சி மொழியாக அறிவித்த பின்பு அதை முதலில் நடைமுறைப்படுத்தியது திருச்சி நகராட்சி தான் இப்படி பல்வேறு வகையில் தமிழ் மொழிக்காக திருச்சி மாவட்டம் பங்காற்றி உள்ளது.இது தவிர இரயில், பேருந்து, விமானம் ஆகிய அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளது.அதனால் மாநாட்டிற்கு வர விரும்புபவர்கள் எளிதாக திருச்சிக்கு வர முடியும். ஆகவே பல்வேறு சிறப்புகள் கொண்ட திருச்சியில் 11 வது உலக தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும். திருச்சியில் மாநாட்டை நடத்தினால் தமிழ் மொழியும் வளர்ச்சி பெறும் திருச்சி மாவட்டமும் பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடையும் எனவே 11 வது உலக தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.எங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.இது தொடர்பாக முதலமைச்சரையும் சந்திக்க உள்ளோம்.திருச்சியில் மாநாடு நடத்த வேண்டும் என பல்வேறு உலக நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும் சந்திப்போம் என்றார்.