

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்ட மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்!…
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்து. ஆளுநர் உரையில், ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. ஆனால், குறிப்பிட்டபடி, ஜூலை மாதம் வெளியாகவில்லை. இந்நிலையில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று வெளியானது.
20 ஆண்டுகளுக்கு முன்னர், கடந்த 2001ஆம் ஆண்டு, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின் இன்று வெளியான வெள்ளை அறிக்கையால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியீடு வெளியிடப்பட்டுள்ளது.120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காட்டிய பாதையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆந்திரா,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ளை அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.
2001இல் பொன்னையன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையம் ஆய்வு செய்தததாக குறிப்பிட்ட அவர், இன்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நான்தான் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை எனவும் 2020 – 21 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
கொரோனாவுக்கு முன்பே தமிழகத்தின் வருமானம் சரியத் தொடங்கி விட்டதாகவும், தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் பொது சந்தா கடன் மட்டும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாயாக இருப்பதாகவும் கூறினார்.
தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்துவிட்டதை சுட்டிக் காட்டிய அவர் ,கடன் சுமை அதிகரித்து வந்த பாதை குறித்தும் விவரித்தார்.
1999-2000 – 18,989 கோடி
2000-2001 – 28,685 கோடி
2001-2002 – 34,540 கோடி
2005-2006 – 50,625 கோடி
2011-2012 – 1,03,999 கோடி
2015-2016 – 2,11,483 கோடி
2017-2018 – 3,14,366 கோடி
2020-2021 – 4,56,660 கோடி
2021 – 4,85,502 கோடி.
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் பொது சந்தா கடன் மட்டும் 2,63,976 ரூபாய் இருக்கிறது என்ற அவர், தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,360 கோடியாக சரிந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் பொது துறை நிறுவனங்களான Tangedco மற்றும் போக்குவரத்து கழகங்கள் கடன் பெற 91 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்துள்ளது அரசு எனவும் கூறினார்.
தமிழகத்தில் மொத்த உற்பத்தி 8.7 சதவீதமாக குறைந்துள்ளது எனவும்
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் மாநில வருவாய் 4.4 சதவீதமாக சரிந்துள்ளது எனவும் பழனி வேல் தியாகராஜன் விமர்சித்தார்.
தமிழ்நாடு அரசு கடன் மீதான ஒரு நாள் வட்டியாக 87.31 கோடி ரூபாயை செலுத்துகிறது.டீசல் விலை உயர்வு, மேலாண்மை செலவு ஆகியவற்றால், ஒரு 1 கிலோ மீட்டர் அரசு பஸ் ஓடினால் அரசுக்கு ரூ.59 நஷ்டம் ஏற்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.
முறைகேடு தவறு, நிர்வாக திறமையின்மை காரணமாக ஒரு லட்சம் கோடி வேறு இடங்களுக்கு சென்றுள்ளதாகவும்,யாரிடம் இருந்து எடுக்க வேண்டுமோ அவரிடம் எடுத்து, யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு கொடுக்க வேண்டும் எனவும் நிதியமைச்சர் விமர்சித்துள்ளார்.
