• Fri. Apr 26th, 2024

சுதந்திர தினந்தன்று போராட்டத்தில் இறங்கிய தியாகியின் வாரிசு!

By

Aug 15, 2021

மதுரையில் சுதந்திரதினமான இன்று சுதந்திர போராட்ட தியாகியின் வாரிசுகள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி முள்ளிப்பள்ளம் காடுபட்டியைச் சேர்ந்தவர் இராமலிங்கம். இவர் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய முக்கியமான தியாகி ஆவார். இவருக்கு ” தியாகி ” என்ற செப்பேடு பட்டயமும் அரசு கொடுத்திருக்கிறது. இவர் இவருடைய மனைவி மாரியம்மாள், மகன் கார்த்திகேயன் ஆகியோர் காடு பட்டியில் 6 சென்ட் நிலத்தில் வீடு, 6 ஏக்கர் விவசாய நிலம் , 6 ஏக்கர் காடு ஆகியவற்றை சொந்தமாக வைத்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் அதற்கு மூலப்பத்திரம் தங்கள் பெயரில் இருப்பதாகவும், அதற்கு பட்டா கேட்டால் அரசு அதிகாரிகள் தர மறுப்பதாக கூறி குற்றச்சாட்டினர்.

இதனைக் கண்டித்து சுதந்திரப் போராட்டத் தியாகி ராமலிங்கத்தின் மகன் மற்றும் அவரது மனைவி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்காக 10 ஆண்டுகளாக போராடி வருவதாகவும், எங்களுக்கு பட்டா வழங்காவிட்டால் இதே இடத்தில் உயிரை விடுவதை தவிர வேறு வழி இல்லை எனக் கூறி மதுரையில் சுதந்திர தின விழா நடக்க இருக்கும் மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பிரதான வாயில் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.


அதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக கூறி அவர்களை சமாதனபடடுத்தி அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *